வணக்கம்பா . இப்ப இன்னாத்துக்கு இந்த பதிவுன்னு பாக்கிறீங்களா , நான் சென்னைக்கு வேல விஷயமா மாத்தல் ஆகி போறேன் , அதான்பா உங்க கிட்ட ஒரு தபா சொல்லிட்டு போலாம்னு வந்தேன் .
குள்ளநரிகூட்டத்தில் இருக்கிற 20 பேரும் என்னை மன்னிச்சிருங்க , சொந்த ஊருக்கு போறதுக்காக சுயநலமா மாத்தல் வாங்கிட்டு போறான்னு நினைக்காதீங்க , உண்மையிலேயே சில தவிர்க்கமுடியாத சொந்த காரணங்கள் உண்டு .
நான் ஊருக்கு செல்லும் போது என் உடமைகளுடன் உங்கள் நினைவுகளையும் சுமந்து செல்கிறேன் , பாரம் அதிகம் தான் இருந்தாலும் சுகமாய் இருக்கின்றன .
விளையாடி , ஊர் சுத்தி , படம் பார்த்து , பிறந்த நாள் கொண்டாடி உங்களுடன் நான் ஈடுபட்ட அனைத்தும் நிகழ்வுகளும் நிழல் படமாய் வந்து செல்கின்றன .
பல சமயம் நாம் சேர்ந்து கொண்டாடிய நிகழ்வுகளில் என் பங்களிப்பாக நான் மௌனத்தை மட்டுமே தந்திருக்கிறேன் , நான் அதிகமாய் மதிக்கும் மனித உணர்வுகள் பாதிக்கபடாமல் இருக்க நான் கையாளும் ஆயுதம் அது . மாற்று கருத்து இருந்தால் மன்னிக்கவும் .
நான் யாரையாவது என் வார்த்தையாலும் , செய்கையாலும் புண்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும் . நான் யார் என்பதை முழுமையாக அறிந்து கொள்ள நீங்கள் பெரிதும் உதவி செய்திருக்கிறீர்கள் .
அடுத்து முறை நீங்கள் சேரும் தருணங்களில் உங்கள் கூட்டத்தின் அளவு நீங்கள் எடுக்கும் புகைப்படங்களில் என்னால் குறைய கூடும் அதற்காக மன்னிக்கவும் .
வாழ்க்கை சக்கரத்தில் என்றாவது ஒரு நாள் நாம் மீண்டும் சிந்திப்போம் , மீண்டும் விளையாடி ,ஊர் சுத்தி , பிறந்த நாள் கொண்டாடி நம் உணர்வுகளை பகிர்ந்து கொள்வோம் .
நான் உங்களை பிரிந்தாலும் , என் கதைகளும் , பதிவுகளும் எப்பொழுதும் உங்களை தொடர்ந்து கொண்டே இருக்கும் ...
நன்றி !!!!!!!
treat க்கான பணத்தை நம் டீம் கேப்டன் ஹரியிடம் கொடுத்து சென்றுள்ளேன் பெற்று கொள்ளவும் . நான் ஊருக்கு செல்வதற்கு பண உதவி செய்ய விரும்புவோர்
பின் வரும் வங்கி எண்ணுக்கு உங்கள் நன்கொடைகளை அனுப்பவும் ..
Account Number : 03541610093226 ,SARJAPUR RAOD
.jpg)
Charles, unaku romba periya mansau macha !!!
ReplyDeleteNanga ennadan unna thooki potu medichalum , porati porati adichalum , adhellam manasula vachukama enga ellarukum treat vaika Rs-10000/- (ur room advance money) apdiya kuduthutiyea pa !!!
Ennadan nee piriyiradhu manasuku kastama irundhalum,
Ini vara birthdays ku cake konjam chinna sizeavae vangalam.
Idha nenacha shock adicha second current cut ana maari sema sandhosama iruku pa !!!
Wish u all success ahead,
Wishing u on behalf of KNK.
@Hari Epo elarayum treat ku kootitu pora?????
ReplyDelete